பெரம்பலூரில் யூத் ரன் மாரத்தான் போட்டி

பெரம்பலூர்,ஜன.20:தேசிய இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் பெரம்பலூரில் கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி மற்றும் ஹச்டி எப்சி வங்கி ஆகியவை இணைந்து நடத்திய யூத் ரன் மாரத்தான் போட்டியில் 600க்கும் மேற்பட்டோர் கலந்து கொண்டனர். தேசிய இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி மத்திய அரசின் பிட் இந்தியா திட்டத்தின் கீழ் நடந்த மாரத்தான் போட்டி பெரம்பலூர் கலெக்டர் அலுவலக நுழைவு வாயில் முன்பு துவங்கியது. நிகழ்ச்சிக்கு கோல்டன் கேட்ஸ் வித்யாஷ்ரம் பள்ளி தாளாளர் ரவிச்சந்திரன் தலைமை வகித்தார். செயலாளர் அங்கைய ற்கண்ணி முன்னிலை வகித்தார். டிஎஸ்பி கென்னடி கொடியசைத்து மாரத்தான் போட்டியை தொடங்கி வைத்தார். இதில் 10 வயது, 14 வயது, 17 வயதுக்குட்பட்டோர் என்ற வயது அடிப்படையில் 3 கிலோமீட்டர், 5 கிலோ மீட்டர், 7 கிலோ மீட்டர் என்ற பிரிவுகளில் 3 வகையான போட்டிகள் நடத்தப்பட்டது. இதில் 17 வயதுக்குட்ப ட்ட பள்ளி மாணவ,மாணவிகள் என 600க்கு மேற்பட்டோர் கலந்துகொண் டனர். வெற்றிப்பெற்றவர்களுக்கு முதல் மூன்று பரிசாக ரொக்கத் தொகை முறையே 3ஆயிரம், 4ஆயிரம், 7ஆயிரம் எனவும், பரிசுகோப்பை மற் றும் சான்றிதழ்கள் வழங்கப்பட்டது. முன்னதாக தேசிய இளைஞர் எழுச்சி தினத்தையொட்டி சுவாமி விவேகான ந்தர் உருவ படத்திற்கு மலர்தூவி மரியாதை செலுத்தப்பட்டது. இதை தொடர்ந்து பிட் இந்தியாவின் நோக்கமான உடல்வளத்தையும், சுகாதாரத்தையும் பேணிகாப்போம் என உறுதிமொழி எடுக்கப்பட்டது.

Tags : Youth Run Marathon Competition ,Perambalur ,
× RELATED பெரம்பலூரில் மலைபோல் குவிந்து கிடந்த குப்பைகள் அகற்றம்