ஜீவானந்தம் சிலைக்கு தலைவர்கள் மரியாதை

புதுச்சேரி, ஜன. 20: கம்யூனிஸ்ட் கட்சியின் மூத்த தலைவர் ஜீவானந்தத்தின் நினைவு தினம் அனுசரிக்கப்பட்டது. இதையொட்டி, புதுவை சாரம் அவ்வை திடலில் உள்ள அவரது சிலைக்கு அரசு சார்பில் சபாநாயகர் சிவக்கொழுந்து, அமைச்சர் கந்தசாமி ஆகியோர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.இந்திய கம்யூனிஸ்ட் சார்பில் முன்னாள் அமைச்சர் விஸ்வநாதன், முன்னாள் எம்எல்ஏ நாரா.கலைநாதன் மற்றும் நிர்வாகிகள் மாலை அணிவித்து மரியாதை செய்தனர். இதேபோல், ஜீவானந்தம் அரசு பள்ளியில் உள்ள சிலைக்கும் இந்திய கம்யூனிஸ்ட் தலைவர்கள் மாலை அணிவித்தனர்.

Tags : Leaders ,
× RELATED தலைவர்கள் வாழ்த்து