×

3 மாதத்திற்கு பிறகு செங்குளம் உபரி நீர் நிறுத்தம்

கோவை, ஜன.19:  கோவை குனியமுத்தூர் செங்குளம் 2.2 கி.மீ தூர கரை சுற்றுப்பரப்பு மற்றும் 4.77 மீட்டர் நீர் தேக்க உயரம் கொண்டது. 2,094 ஏக்கர் பாசனத்திற்கு பயன்படும் இந்த குளம் 3 மாதம் முன் நிரம்பியது. குளத்திற்கு வரும் தண்ணீர் நிறுத்தப்பட்டது. மேற்கு தொடர்ச்சி மலையில் தொடர்ந்து மழை பெய்ததாலும், நொய்யல் ஆற்றின் முழு நீரும் செங்குளத்திற்கு திருப்பி விடப்பட்டதால் நீர் வரத்து தொடர்தது. குளம் நிரம்பி உபரி நீர் பாசன வாய்க்கால் வழியாக வழிந்தோடியது. உபரி நீர் பாயும் வாய்க்கால் 2.5 கி.மீ தூரம் அமைந்துள்ளது. இந்த வாய்க்கால் குறிச்சி குளத்தில் முடிவடைகிறது. கடந்த 3 மாதமாக செங்குளம் நிரம்பி உபரி நீர் பாய்ந்து கொண்டிருந்தது. நேற்று முன் தினம் உபரி நீர் வெளியேற்றம் நின்றது. குறிச்சி குளத்தில் நீர் வரத்து முழுமையாக நிறுத்தப்பட்டது. ஏற்கனவே குறிச்சி குளம் நிரம்பியிருந்தது. செங்குளத்தின் உபரி நீர் குறிச்சி குளத்தில் பாய்ந்து அதன் உபரி நீர் நொய்யல் ஆற்றில் விடப்பட்டது. செங்குளத்தின் உபரி நீர் நின்ற நிலையில் குறிச்சி குளத்தின் உபரி நீரும் கட்டுபாட்டிற்கு வந்தது. கடந்த 20 ஆண்டில் செங்குளம் 3 முறை நிரம்பியது. இதில் முதல் முறையாக 3 மாதமாக உபரி நீர் வெளியேறியது குறிப்பிடத்தக்கது.

Tags : water stop ,
× RELATED கம்பம் புதிய பஸ்நிலையத்தில் அம்மா குடிநீர் விற்பனை நிறுத்தம்