×

62 கிராம பழங்குடி மக்கள் சார்பில் பொங்கல் வழிபாடு

அரூர், ஜன.19: அரூர் அருகே சித்தேரி மலை கிராமத்தில் பழங்குடியின மக்கள் பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். அரூர் அருகே சித்தேரி மலை கிராமம் தரைமட்டத்திலிருந்து சுமார் 4000அடி உயரத்தில் உள்ளது. 62 கிராமங்களில், சுமார் 20 ஆயிரம் மக்கள் வசித்து வருகின்றனர். இவர்கள் அனைவரும் பழங்குடி இனத்தை சேர்ந்தவர்கள். இவர்கள் மழையை நம்பியே விவசாயம் செய்து வருகின்றனர். சித்தேரியில் அழகூர் செக்கம்பட்டி என்ற கிராமத்தில் இருந்து 4 கிலோ மீட்டர் மலைமீது ஏறி, 3600 அடி உயரத்தில் அமைந்துள்ள கரியபெருமாள் வெங்கட்ராமன் சுவாமி கோயிலில் 62 கிராமங்கள் சார்பில், பொங்கல் வைத்து வழிபாடு நடத்தினர். இதுகுறித்து கிராமமக்கள் கூறுகையில், 62 கிராமங்களை சேர்ந்த பழங்குடி இனத்தவர்கள். எங்களது குல வழக்கப்படி, இந்த மலையில் எங்கள் முன்னோர்கள் பல தலைமுறைகளாக 10நாட்கள் விரதம் இருந்து, தை மாதம் 3ம் நாளான கரிநாளான நேற்று முன்தினம் பொங்கல் வைத்து பூஜை செய்து, சாமியை தூக்கி சுற்றி வந்து கும்மியடித்து மகிழ்வோம். இந்த விழாவில் சித்தேரி மலை, ஏற்காடு, பச்சை மலை, கருமந்துறை, வத்தல்மலை உள்ளிட்ட பகுதியை சேர்ந்த பழங்குடியின மக்கள் கலந்து கொண்டனர் என்றார்.

Tags : Village Tribes ,
× RELATED திரவுபதியம்மன் கோயில் கும்பாபிஷேக பெருவிழா