×

களைகட்டும் பொங்கல் விற்பனை சாத்தூர் அருகே கத்தாளம்பட்டியில் காட்சிப் பொருளான சுகாதார வளாகம்

சாத்தூர், ஜன. 14: சாத்தூர் அருகே, கத்தாளம்பட்டி ஊராட்சியில் உள்ள வாழவந்தாள் கிராமத்தில் 2 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட மகளிர் சுகாதார வளாகம் முறையான பராமரிப்பின்றி காட்சிப் பொருளாக உள்ளது. மேலும், சமூக விரோதிகளின் கூடாரமாக மாறி வருகிறது. சாத்தூர் அருகே, கத்தாளம்பட்டி ஊராட்சியில் வாழவந்தாள்புரம் கிராமம் உள்ளது.

இந்த கிராமத்தில் 2 ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 2 ஆண்டுகளுக்கு முன்பு, ஊராட்சி நிர்வாகம் சார்பில் மகளிர் சுகாதார வளாகம் கட்டப்பட்டு திறக்கப்பட்டது.  சில மாதங்கள் மட்டும் பயன்பாட்டில் இருந்த சுகாதார வளாகம் குடிநீர் பிரச்னை, மோட்டார் பழுது, முறையான பராமரிப்பு இல்லாமை ஆகிய காரணங்களால் தற்போது காட்சிப் பொருளாக உள்ளது. மேலும், சுகாதார வளாகத்தில் பல்வேறு சமூகவிரோதச் செயல்கள் அரங்கேறி வருகின்றன. சுகாதார வாளகத்தின் அருகே குப்பைகள் கொட்டப்படுவதால் துர்நாற்றம் வீசுகிறது. இது குறித்து பலமுறை ஊராட்சி நிர்வாகத்திடம் பொதுமக்கள் புகார் அளித்தும் நடவடிக்கை இல்லை.

எனவே, சம்மந்தப்பட்ட அதிகாரிகள் சுகாதார வளாகம் அருகே உள்ள குப்பைகளை அகற்றி, குடியிருப்புகள் அருகே குப்பைத் தொட்டி வைக்கவும், மகளிர் சுகாதார வளாகத்தை பயன்பாட்டுக்கு கொண்டுவரவும் பொதுமக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Sattur ,Kattalampatti ,
× RELATED அரசு பஸ் கண்ணாடியை உடைத்த வாலிபர் கைது