கொடைக்கானல் காப்பகத்தில் நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா

கொடைக்கானல், ஜன. 14: கொடைக்கானல் பாம்பார்புரம் பகுதியில் உள்ளது பூர்விர் காப்பகம். இங்கு கொடைக்கானல் மலைவாழ் ஏழை மாணவ, மாணவிகள் தங்கி படித்து வருகின்றனர். இவர்களுக்கு குறிஞ்சி அரிமா சங்கம் சார்பில் நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டது. சங்க தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகிக்க, செயலாளர் மோகன், பட்டய செயலாளர் ராஜேஷ் கண்ணா முன்னிலை வகித்தனர். விழாவில் 50க்கும் மேற்பட்ட மாணவ, மாணவிகளுக்கு கம்பளி ஆடைகள், ஸ்கூல் பேக்குகள் வழங்கப்பட்டன. இதில் சங்க உறுப்பினர்கள், நிர்வாகிகள் பலர் கலந்து கொண்டனர்.

Tags : Welfare Program Assistance Ceremony ,Kodaikanal Archive ,
× RELATED பாப்பிரெட்டிப்பட்டியில் நல திட்ட உதவி வழங்கும் விழா