×

பரமன்குறிச்சியில் நலத்திட்ட உதவி வழங்கும் விழா

உடன்குடி, டிச.1: பரமன்குறிச்சியில் முதலமைச்சரின் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா நடந்தது. கலெக்டர் சந்தீப்நந்தூரி தலைமை வகித்தார். அமைச்சர் கடம்பூர் ராஜூ பங்கேற்று 662 பயனாளிகளுக்கு நலத்திட்ட உதவிகளை வழங்கி பேசினார். நிகழ்ச்சியில், எம்எல்ஏக்கள் சண்முகநாதன், சின்னப்பன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். விழாவில், அமைச்சர் கடம்பூர் ராஜூ பேசுகையில், ‘முதலமைச்சர் சிறப்பு குறைதீர்க்கும் திட்டத்தின் கீழ் தூத்துக்குடி மாவட்டத்தில், ஒரு மாத காலம் முகாம் நடத்தப்பட்டு 12,668 மனுக்கள் பெறப்பட்டன. இதில் 5015 மனுக்களுக்கு நலத்திட்ட உதவிகள் வழங்கப்பட்டுள்ளது. மற்ற மனுக்களின் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது.  ஏற்கனவே கோவில்பட்டி மற்றும் கயத்தாறு வட்டத்தில் உள்ள 1043 பயனாளிகளுக்கு ரூ.3 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், விளாத்திகுளம் மற்றும் எட்டயபுரத்தில் 1122 பயனாளிகளுaகு ரூ.1 கோடியே 75 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், தூத்துக்குடி மற்றும் ஓட்டப்பிடாரத்தில் 1285 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 29 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும், திருவைகுண்டம் மற்றும் ஏரலில் 900 பயனாளிகளுக்கு ரூ.1 கோடியே 48 லட்சம் மதிப்பிலான நலத்திட்ட உதவிகளும் வழங்கப்பட்டது. தற்போது திருச்செந்தூர் மற்றும் சாத்தான்குளம் வட்டத்தில் 662 பயனாளிகளுக்கு ரூ.2.58 கோடி மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்படுகிறது.  இவ்வாறு அவர் பேசினார்.நிகழ்ச்சியில் மாவட்ட அறங்காவலர் குழு தலைவர் மோகன், திருச்செந்தூர் கோட்டாட்சியர் (பொறுப்பு) விஜயகுமார், சமூக பாதுகாப்பு திட்ட தனித்துணை ஆட்சியர் சங்கரநாராயணன், வட்டாட்சியர்கள் ஞானசேகர் (திருச்செந்தூர்), ராஜலட்சுமி (சாத்தான்குளம்) உள்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags : Welfare Program Assistance Ceremony ,Paramankurichi ,
× RELATED திருச்செந்தூர் முருகன் கோயிலுக்கு...