கருத்தரங்கில் வலியுறுத்தல் கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா

பாடாலூர், ஜன. 14: ஆலத்தூர் தாலுகா கொளக்காநத்தம் அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில் சமத்துவ பொங்கல் விழா மற்றும் மரக்கன்றுகள் நடும் விழா நடந்தது. துணை இயக்குனர் கீதாராணி தலைமை வகித்தார். விழாவில் பொங்கல் வைக்கப்பட்டு சிறப்பு பூஜை நடத்தப்பட்டது. விழாவில் கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலையத்தில் குடும்பநல அறுவை சிகிச்சை செய்து கொண்ட தாய்மார்களுக்கு பொங்கல் பானை பரிசாக வழங்கப்பட்டது. கொளக்காநத்தம் வட்டார மருத்துவ அலுவலர் மகாலட்சுமி, மற்றும் அலுவலர்கள், கொளக்காநத்தம் ஆரம்ப சுகாதார நிலைய பணியாளர்கள் பங்கேற்றனர். விழாவையொட்டி அரசு ஆரம்ப சுகாதார நிலைய வளாகத்தில் மரக்கன்றுகள் நடப்பட்டது.

Tags : Seminar Equal Pongal Festival ,Government Primary Health Center ,Kokkanadam ,
× RELATED நுகர்வோர் அமைப்பு வலியுறுத்தல்...