×

சென்னை விமான நிலையத்தில் 62.28 லட்சம் தங்கம் பறிமுதல்: 4 பேர் கைது

சென்னை: துபாயில் இருந்து ஏர் இண்டியா விமானம் நேற்று அதிகாலை 5 மணிக்கு சென்னை சர்வதேச விமான நிலையம் வந்தது. அதில், நாகப்பட்டினத்தை சேர்ந்த முகமது ரிபாய்தீன் (25), சென்னையை சேர்ந்த சீனி இப்ராஹிம் (49) சுற்றுலா பயணியாக துபாய் சென்றுவிட்டு சென்னை திரும்பினர். அவர்களை மடக்கி சோதனை செய்தபோது, உள்ளாடைக்குள் தங்க செயின்கள் மற்றும் தங்ககட்டிகள் மறைத்து வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. அதன் எடை 782 கிராம். அதன் சர்வதேச மதிப்பு ரூ.32.18 லட்சம்.

இதேபோல், அபுதாபியில் இருந்து எத்தியார்டு ஏர்லைன்ஸ் நேற்று காலை 5.30 மணிக்கு சென்னை வந்தது. அதில் திருச்சியை சேர்ந்த ஹமானுல்லா (40) சுற்றுலா பயணியாக சென்று விட்டு சென்னை திரும்பி வந்தார். அவரது ஆசனவாயில் 457 கிராம் தங்க கட்டி மறைத்து வைத்திருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு 18.2 லட்சம். இதற்கிடையே நேற்று இலங்கையில் இருந்து ஸ்ரீலங்கன் ஏர்லைன்ஸ் விமானம் சென்னை வந்தது. அதில் ராமநாதபுரத்தை சேர்ந்த சமாஸ்கான் பாரே (37) என்பவர் சுற்றுலா பயணியாக சென்றுவிட்டு வந்திருந்தார். அவரது பேன்ட் ரகசிய அறையில் 280 கிராம் தங்க கட்டிகள் மறைத்து வைக்கப்பட்டிருந்தது. அவற்றை பறிமுதல் செய்தனர். அதன் மதிப்பு 11.9 லட்சம். இதுதொடர்பாக 4 பேரையும் சுங்க அதிகாரிகள் கைது செய்தனர்.

* அம்பத்தூர்  அடுத்த கள்ளிகுப்பம், பாடசாலை தெருவை சேர்ந்த டிராவல்ஸ் நிறுவன டிரைவர் சிவகுமார் (24), நேற்று முன்தினம் நள்ளிரவு சவாரி முடித்து வீட்டுக்கு சென்றபோது, கொரட்டூர் 200அடி சாலை, அன்னை நகர் அருகே கார் திடீரென பழுதானது. இதனால், காரை சாலை ஓரமாக நிறுத்தி சரி செய்து கொண்டிருந்தார். அப்போது, அவரை தாக்கி வழிப்பறியில் ஈடுபட்ட கொளத்தூர், ஜி.கே.எம் காலனி, அண்ணா தெருவைச் சேர்ந்த மணிகண்டன் (25) என்பவரை  போலீசார் கைது செய்தனர். தப்பியோடிய கூட்டாளிகள் லோகேஷ், கார்த்தி ஆகியோரை தேடி வருகின்றனர்.


'14.3  லட்சம் கரன்சி சிக்கியது'
சென்னையில் இருந்து இலங்கைக்கு ஏர்  இண்டியா விமானம் நேற்று காலை 7.30 மணிக்கு புறப்பட தயாராக இருந்தது.  அதில் பயணிக்க வந்த  இலங்கையை சேர்ந்த சபிகா ரூபினி (49), வசந்தி (49) ஆகியோரின் உடமைகளை சோதனை செய்தபோது, 14.3  லட்சம் மதிப்புடைய அமெரிக்க டாலர் இருப்பது தெரிந்தது. அவற்றை கைப்பற்றினர். பின்னர், 2 பெண் பயணிகளை  கைது செய்தனர்.

Tags : airport ,Chennai ,
× RELATED தமிழிசை பேட்டி வசதியான கவர்னர் வாழ்க்கையை விட்டு வந்திருக்கிறேன்