டிராக்டர் மீது பஸ் ஏறி விபத்து விவசாயி உடல் நசுங்கி பலி

ஓசூர், ஜன.13: ஓசூர் அருகே மூக்கண்டப்பள்ளி பகுதியில் நேற்று அதிகாலை தேசிய நெடுஞ்சாலையில் விவசாயி ஒருவர் டிராக்டரை ஓட்டிக்கொண்டு ஓசூர் நோக்கி வந்து கொண்டிருந்தார். அப்போது, பெங்களூருவில் இருந்து பின்னால் வந்த கர்நாடக அரசு பேருந்து டிராக்டர் மீது மோதியது. மோதிய வேகத்தில் அந்த பஸ் டிராக்டர் மீது ஏறி நின்றது.இந்த கோர விபத்தில் பஸ்சுக்கு அடியில் சிக்கி உடல் நசுங்கி படுகாயமடைந்த விவசாயி சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். மேலும், பஸ்சில் பயணம் செய்த நடராஜர் என்பவர் தூக்கி வீசப்பட்டதில் படுகாயமடைந்தார். விபத்து குறித்து தகவல் அறிந்ததும் ஓசூர் சிப்காட் போலீசர் விரைந்து சென்று மீட்பு பணியை முடுக்கி விட்டனர். தீயணைப்பு துறையினர் போராடி டிராக்டர் மீது ஏறி நின்ற பஸ்சை பாதுகாப்பாக மீட்டனர். இதனால், அந்த வழியாக போக்குவரத்து பாதிக்கப்பட்டது. விபத்து குறித்து சிப்காட் போலீசார் ஒரு வழக்குப்பதிந்து உயிரிழந்த விவசாயி குறித்து விசாரித்து வருகின்றனர்.

Tags : Bus crash ,
× RELATED பொன்னமராவதி அருகே டிராக்டர் மீது பஸ் மோதல் பயணியின் கை முறிந்தது