×

காரிமங்கலத்தில் தார்சாலை அமைக்கும் பணி துவக்கம்

காரிமங்கலம், ஜன.13: காரிமங்கலம் பேரூராட்சிக்குட்பட்ட சந்தைப்பேட்டையில் இருந்து, பொன்னிகானூர் வழியாக காட்டுசீகலஅள்ளி வரை 1000க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றன. இப்பகுதியில் தார்சாலை பழுதடைந்து காணப்பட்டதால், பொதுமக்கள் பெரும் பாதிப்புக்குள்ளாகினர். இதனால் புதிய தார்சாலை அமைக்க கோரி, அமைச்சர் அன்பழகனிடம் கோரிக்கை மனு அளித்தனர். இதையடுத்து, நபார்டு திட்டத்தின் கீழ் புதிய சாலை அமைக்க 1.50 கோடி ஒதுக்கீடு செய்யப்பட்டது. இதையடுத்து 3.30 கிலோமீட்டர் தூரம் தார்சாலை அமைக்கும் பணி தொடங்கி தீவிரமாக நடந்து வருகிறது. இப்பணிகளை பேரூராட்சி பணிகள் மேற்பார்வையாளர் முருகன் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.

Tags : Commencement ,Karaimangalam ,
× RELATED மழையால் சேதமடைந்த சாலைகள் சீரமைக்கும் பணி துவக்கம்