காரிமங்கலத்தில் பீர்க்கங்காய் சாகுடியில்

விவசாயிகள் ஆர்வம்தர்மபுரி, ஜன.13: காரிமங்கலம் வட்டாரத்தில் பீர்க்கங்காய் சாகுபடி செய்வதில் விவசாயிகளுக்கு ஆர்வம் அதிகரித்துள்ளது. காரிமங்கலம் ஒன்றியத்தில் கன்னிப்பட்டி, மாட்லாம்பட்டி, இண்டமங்கலம் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் பீர்க்கங்காய் சாகுபடி செய்யபட்டுள்ளது. கன்னிப்பட்டி பகுதியில் சுமார் 50 ஏக்கர் பரப்பளவில் பீர்க்கங்காய் பயிரிடப்பட்டுள்ளது.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘காரிமங்கலம் பகுதியில் பீர்க்கங்காய் விளைச்சலுக்கு ஏற்ற மண் தரமாக உள்ளது. பீர்க்கங்காய் பயிரிட்டு 30 நாட்களில் நன்கு விளைந்து அறுவடைக்கு தயாராகிறது. பின்னர், 2 நாட்களுக்கு ஒருமுறை அறுவடை செய்யலாம். ஒரு ஏக்கருக்கு 2 நாட்களுக்கு ஒரு முறை 100 கிலோ பீர்க்கங்காயை அறுவடை செய்யலாம். ஒரு கிலோ ₹20 வரை விலை கிடைக்கிறது. கணிசமாக லாபம் கிடைப்பதாலும், விலை ஒரே நிலையில் இருப்பதாலும் தர்மபுரியில் இருந்து பெங்களூரு, மைசூரு பகுதிகளுக்கு விற்பனைக்கு அனுப்பி வைக்கப்படுகிறது,’ என்றனர்.

Tags : Karimmangalam ,
× RELATED காரிமங்கலம் வாரச்சந்தையில் தேங்காய் விலை உயர்வு