×

காரிமங்கலம் ஒன்றிய சேர்மன் வாக்காளர்களுக்கு நன்றி தெரிவிப்பு

காரிமங்கலம், ஜன.13: காரிமங்கலம் ஒன்றிய சேர்மன் சாந்தி பெரியண்ணன் வாக்காளர்களை நேரில் சந்தித்து நன்றி தெரிவித்தார். காரிமங்கலம் ஊராட்சி ஒன்றிய சேர்மன் தேர்தலில் அதிமுகவை சேர்ந்த சாந்தி பெரியண்ணன் வெற்றி பெற்றார். துணை சேர்மனாக போட்டியின்றி செல்வராஜ் தேர்ந்தெடுக்கப்பட்டார். வெற்றி பெற்ற சாந்தி பெரியண்ணன் மற்றும் ஒன்றிய குழுவினர் பிடிஓ அலுவலகத்தில் இருந்து பேருந்து நிலையம் கடைவீதி வழியாக மேளதாளம் முழங்க, கட்சி தொண்டர்களுடன் ஊர்வலமாக வந்து, ராமசாமி கோயில் அருகேயுள்ள எம்ஜிஆர் சிலைக்கு மாலை அணிவித்தனர்.

இதை தொடர்ந்து, வாக்களித்த பொதுமக்களை நேரில் சந்தித்து சாந்தி பெரியண்ணன் நன்றி தெரிவித்தார். இந்நிகழ்ச்சியில், கூட்டுறவு சர்க்கரை ஆலை இயக்குநர் ரவிசங்கர், முன்னாள் கூட்டுறவு சங்க தலைவர்கள் செந்தில்குமார், மாது, மண்டல போக்குவரத்து கழக தலைவர் சிவம், நகர செயலாளர் காந்தி, பேகாரஅள்ளி ஒன்றிய கவுன்சிலர் மாது ஆகியோர் கலந்து கொண்டனர்.

Tags : voters ,Carimankalam Union ,
× RELATED நான் நலமாக இருக்கிறேன், சிகிச்சை...