தொன்போஸ்கோ கல்லூரியில் மாணவர்கள் பங்கேற்ற பொங்கல் விழா

தர்மபுரி, ஜன.13:தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. தர்மபுரி தொன்போஸ்கோ கல்லூரியில் பொங்கல் விழா கொண்டாடப்பட்டது. கல்லூரியின் முதுநிலை தமிழ் துறை சார்பில் நடந்த இவ்விழாவில் மாணவ, மாணவிகள் தனித்தனியாக 46 குழுக்களாக 46 பானைகளில் பொங்கல் வைத்தனர். கல்லூரி செயலாளர் ராஜ்குமார் மெர்வின், கல்லூரி முதல்வர் சிலுவைமுத்து, பொருளாளர் சாம்சன் சண்முகம் ஆகியோர் போட்டிகளில் வெற்றி பெற்ற குழுவினர்களுக்கு பரிசுகளை வழங்கி பேசினர். விழாவில் தமிழ் துறைத் தலைவர் கண்ணதாசன், அதியன் தமிழ் மன்ற தலைவர் கார்த்திக், பேராசிரியர்கள், அலுவலகப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags : ceremony ,Donbasco College ,
× RELATED பிரின்ஸ்  வெங்கடேஸ்வரா கல்லூரி...