×

பாஜகவின் நடவடிக்கையால்அவசரநிலை உருவாகும் சூழல் மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் பேச்சு

தேனி, டிச. 13: இந்துத்துவா கொள்கைகளை நாட்டில் திணிப்பதன் மூலம் நாட்டில் அவசரநிலை உருவாகி புரட்சி உருவாகும் என தேனியில் தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்ஆரூண் தெரிவித்தார். தேனியில் மாவட்ட இளைஞர் காங்கிரஸ் கட்சியின் சார்பில் `விழுதுகளை நோக்கி’ எனும் நிகழ்ச்சி நடந்தது. மாவட்ட இளைஞர் காங்கிரஸ் தலைவர் கூடலூர்சரவணன் தலைமை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் தலைவர் கூடலூர்.முருகேசன் முன்னிலை வகித்தார். மாவட்ட காங்கிரஸ் பொருளாளர் அப்பு என்ற பாலசுப்பிரமணியன் வரவேற்றார்.

அகில இந்திய காங்கிரஸ் பொதுச் செயலாளர் ஜெமிமேத்தா, தமிழ்நாடு மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்ஆரூண், முன்னாள் மாநில இளைஞர் காங்கிரஸ் செயலாளர் உமேஸ் ஆகியோர் கலந்து கொண்டு பேசினர்.
நிகழ்ச்சியின்போது, மாநில இளைஞர் காங்கிரஸ் தலைவர் அசன்ஆரூண் கூறியதாவது: மாநிலம் முழுவதும் இளைஞர் காங்கிரசை வலிமைப்படுத்த விழுதுகளை நோக்கி எனும் பெயரில் சுற்றுப்பயணம் மேற்கொள்ளப்பட்டு வருகிறது. நடக்க உள்ள உள்ளாட்சித் தேர்தலில் காங்கிரஸ் கூட்டணி கட்சிகளின் சார்பில் போட்டியிட்டு அதிக வெற்றி பெறுவது ஆலோசிக்கப்பட்டது. நாடு முழுவதும் இந்துத்வா அஜெண்டாவை நிறைவேற்ற மோடி அரசு முயன்று வருகிறது. இதன்மூலம் ஒரே நாடு, ஒரே மொழி, ஒரே மதம் என்ற அடிப்படையில் செல்கிறது. இத்தகைய போக்கால் நாட்டில் அவசரநிலை உருவாகும் நிலை உருவாகியுள்ளது. இன்றைக்கு மத்தியபிரதேசம், ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் பாஜகவின் அத்துமீறல்களால் பாஜக தோல்விகளை சந்தித்து வருகிறது என்றார்.

Tags : State youth congress leader ,
× RELATED பயிர்களை அழிக்கும் படையப்பா மூணாறு விவசாயிகள், மக்கள் பீதி