×

மாநகரில் கடும் குடிநீர் தட்டுப்பாடு

திருப்பூர்,டிச.13:திருப்பூர்  - தாராபுரம் ரோட்டிலுள்ள வஞ்சிபாளையம் பகுதியில் குடிநீர் பற்றாக்குறை  நீடிப்பதால் பொதுமக்கள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.திருப்பூர்  தாராபுரம் ரோடு பகுதியில் உள்ள வஞ்சிபாளையத்தில் சுமார் 1000  குடியிருப்புகளின் பொதுமக்கள் வசித்து வருகின்றனர். அது மட்டுமல்லாமல் அந்த  பகுதியில் பள்ளிகள், வழிபாட்டுத்தலங்கள், தொழில் நிறுவனங்கள் ஆகியவையும்  செயல்பட்டு வருகிறது. இந்நிலையில் இந்த பகுதியில் குடிநீர் பற்றாக்குறை  அதிகரித்து வருகிறது. வஞ்சிபாளையம் பகுதியில்  குடிநீர் 10 நாட்களுக்கு ஒரு  முறைதான் விநியோகிக்கப்படுகிறது. மேலும் இந்த வஞ்சிபாளையம்  வீரபாண்டியிலிருந்து மேடான பகுதி என்பதால் 10 நாட்களுக்கு ஒரு முறை 1 மணி  நேரம் மட்டுமே விநியோகிக்கும் குடிநீரும் அழுத்தம் குறைவாக வருகிறது.  இதனால் குறைவான குடங்களே நிரம்புகிறது. இதனால் அங்கு வசிக்கும் பொதுமக்கள்  தங்கள் அத்தியாவசிய பயன்பாட்டிற்கு பயன்படுத்த கூட குடிநீர் கிடைக்காமல்  தவித்து வருகின்றனர். இது குறித்து அப்பகுதி பொதுமக்கள் கூறியதாவது:  இந்த பகுதியில் தொடர்ந்து தண்ணீர் பிரச்னை அதிகரித்து வருகிறது. 10  நாட்களுக்கு ஒரு முறை வரக்கூடிய தண்ணீர் 10 குடங்கள் கூட நிரம்புவது  கிடையாது.இது குறித்து மாநகராட்சி, ஆட்சியர் அலுவலகத்தில் மனு கொடுத்து  விட்டோம். இதுவரையில் எந்த நடவடிக்கையும் இல்லை. இங்கு வரக்கூடிய  குழாயிலிருந்து கசிந்து வரும் குடிநீரை குடத்தில் பிடித்து பயன்படுத்தி  வருகிறோம். மேலும் சிலர்  காசு கொடுத்து குடிநீரை விலைக்கு வாங்கி  பயன்படுத்தி வருகிறார்கள். குடிநீர் தட்டுப்பாட்டை போக்க உரிய நடவடிக்கை  மேற்கொள்ள வேண்டும் என கோரிக்கை விடுத்தனர்.

Tags : city ,
× RELATED சென்னை கண்ணகி நகரில் போலீசார் மீது கஞ்சா போதை ஆசாமிகள் தாக்குதல்