×

சேரன்மகாதேவி, சுரண்டை, சங்கரன்கோவிலில் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா

வீரவநல்லூர், டிச. 13: சேரன் மகாதேவி, சுரண்டை, சங்கரன்கோவிலில் நடிகர் ரஜினிகாந்த் பிறந்தநாள் விழா கொண்டாடப்பட்டது. ரஜினிகாந்தின் 70வது பிறந்தநாளை முன்னிட்டு மாவட்ட ரஜினி மக்கள் மன்ற இணை செயலாளர் உலகன்குளம் துரை தலைமையில் மக்கள் மன்றத்தினர், சேரன்மகாதேவியில் பொதுமக்களுக்கு இனிப்பு வழங்கி கொண்டாடினர். ஒன்றிய இணை செயலாளர் கணேஷ்பாபு முன்னிலை வகித்தார்.
இதில் ஒன்றிய துணை செயலாளர் சேகர்காந்த், வீரை நகர செயலாளர் பிச்சையா, காருகுறிச்சி பொறுப்பாளர் ஜெய்குமார், சேரை நகர செயலாளர் ராஜ், நகர இணை செயலாளர் முருகன், துணை செயலாளர் பொன்வேல், மகளிரணி சிவா என்ற பாலா உள்பட பலர் கலந்து கொண்டனர்.
சுரண்டையில் நடந்த விழாவிற்கு ரஜினி மன்ற செயலாளர் சின்னத்தம்பி தலைமை வகித்தார். சங்கர், நாகராஜன், சுரேந்தர், முனியாண்டி, அசோக் முன்னிலை வகித்தனர். லோகநாதன் வரவேற்றார். ஆனந்த் தொகுத்து வழங்கினார். விழாவில் கல்வியில் சிறந்து விளங்கும் 70 மாணவர்களுக்கு பரிசும், ஆதரவற்ற 150 குழந்தைகளுக்கு காலை உணவு, போர்வை, கல்வி உபகரணங்களும் வழங்கப்பட்டது. விதவைகள் மற்றும் ஆதரவற்ற முதியோர் 70 பேருக்கு போர்வை, சேலைகள் வழங்கப்பட்டது.

பராசக்தி பள்ளியில் நடந்த மரம் நடுவிழாவில் பள்ளி தலைவர் சகோதரி சண்முகசுந்தரம், பேராசிரியர் பிரதீப், விவசாய சங்கத் தலைவர் முருகன் ஆகியோர் மரக்கன்றுகளை நட்டனர். விழாவில் சேர்மச்செல்வம், ஆறுமுகசாமி, முருகேசன், சுப்பிரமணியன், மாரியப்பன், ஆறுமுகசாமி, சுரேஷ், மணிகண்டன், ரெங்கராஜ், சிவபாலன், மாணிக்கசாமி, கனகராஜ், குமணன் சூர்யா, கார்த்திக் உள்பட பலர் கலந்து கொண்டனர். சங்கரன்கோவிலில் நடந்த நிகழ்ச்சிக்கு ரஜினி மக்கள் மன்ற நகர செயலாளர் முருகானந்தம் (எ) ரமேஷ் தலைமை வகித்தார். நகர இளைஞரணி செயலாளர் தளபதிராஜ் முன்னிலை வகித்தார். இதையொட்டி முப்பிடாதி அம்மன் கோயிலில் சிறப்பு பூஜைகள் நடந்தது. தொடர்ந்து பஸ் நிலையம் அருகே பட்டாசுகள் வெடித்து பொதுமக்களுக்கு இனிப்புகள் வழங்கினர். செங்குந்தர் நடுநிலைப்பள்ளி, ஆர்சி நடுநிலைப்பள்ளி, கோமதிஅம்பாள் ஆரம்ப பாடசாலை ஆகிய பள்ளிகளில் 250 மாணவ, மாணவிகளுக்கு நோட்டு, ஜாமின்டரிபாக்ஸ், பென்சில், பேனா உள்ளிட்டவை வழங்கப்பட்டது.

Tags : Rajinikanth ,Birthday Celebration ,Cheranmakadevi ,