காரிமங்கலம் பஸ் ஸ்டாண்ட் செல்லும் சாலைகள் பழுது

காரிமங்கலம், டிச.12: காரிமங்கலம் பஸ் ஸ்டாண்டிற்கு செல்லும் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளதால் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். காரிமங்கலம் பேரூராட்சியில் பஸ் ஸ்டாண்ட் செயல்பட்டு வருகிறது. நகரின் மைய பகுதியில் பேரூராட்சி நிர்வாகத்தின் கட்டுப்பாட்டில் உள்ள பஸ் ஸ்டாண்டில் இருந்து, நாள்தோறும் நூற்றுக்கணக்கான அரசு மற்றும் தனியார் பஸ்கள் சென்று வருகிறது. மேலும் பஸ் ஸ்டாண்டிற்குள் பேரூராட்சிக்கு சொந்தமான 25க்கும் மேற்பட்ட கடைகள் அமைந்துள்ளது. நகரில் முக்கியத்துவம் வாய்ந்த இந்த பஸ் ஸ்டாண்டில் அடிப்படை வசதிகள் இல்லை.  

பஸ் ஸ்டாண்டில் நுழைவுவாயில் மற்றும் ெவளியே செல்லும் பகுதியில் சாலைகள் குண்டும், குழியுமாக உள்ளது. இதனால் இந்த வழியே செல்லும் பஸ்களில் பயணிக்கும் பயணிகள் கடும் சிரமத்திற்குள்ளாகி வருகின்றனர். மேலும் இந்த வழியாக இருசக்கர வாகனங்களில் வருபவர்கள் அடிக்கடி விபத்தில் சிக்கி வருகின்றனர். எனவே பஸ் ஸ்டாண்டில் பழுதடைந்த சாலைகளை சீரமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : roads ,bus stand ,Karimangalam ,
× RELATED தபால் துறை அலுவலகங்களின் சர்வர் பழுது...