அருவியில் குளித்தவர் வழுக்கி விழுந்து பலி

தேனி, டிச. 11: தேனி அருகே கார்த்திகை தீபம் ஏற்ற மலைக்கோயிலுக்கு சென்ற மதுரை வாலிபர் அருவியில் குளிக்கும் போது வழுக்கி விழுந்து பலியானார்.மதுரை ஆரப்பாளையத்தை சேர்ந்தவர் நடராஜ் (45). இவர் தேனி அரண்மனைப்புதுாரில் வசிக்கும் தனது தம்பி ரமேஷ் என்பவருடன் பூதிப்புரம் அருகே உள்ள மரக்காமலை பகுதிக்கு சென்றார். அங்கு மலைமேல் உள்ள சன்னாசியப்பன் கோயிலில் கார்த்திகை தீபம் ஏற்ற இருவரும் சென்றனர்.

தீபம் ஏற்றும் முன்னர் அங்குள்ள அருவியில் குளித்தனர். அப்போது வழுக்கி விழுந்த நடராஜ் தலையில் பலத்த காயமடைந்து சம்பவ இடத்திலேயே இறந்தார். தேனி தீயணைப்பு படையினர் சென்று நடராஜ் உடலை மீட்டு மருத்துவ பரிசோதனைக்கு தேனி மருத்துவக் கல்லுாரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். பழனிசெட்டிபட்டி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

Tags :
× RELATED நீர்மட்டம் 3 டிஎம்சியை எட்டியதால்...