×

போலீஸ் வலை வீச்சு தேர்தல் ஆணையம் கட்டுப்பாடு விதிக்க மக்கள் வலியுறுத்தல் அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து

மதுரை, டிச. 11:மதுரையில் அட்டைப்பெட்டி தயாரிப்பு கம்பெனியில் தீ விபத்து ஏற்பட்டது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர். மதுரை சிஎம்ஆர் ரோட்டில் அட்டைப்பெட்டி தயாரிக்கும் கம்பெனி வைத்திருப்பவர் ராேஜந்திரன். இந்த கம்பெனியில் நேற்றிரவு தீ விபத்து ஏற்பட்டது. தகவலறிந்த அனுப்பானடி தீயணைப்பு படையினர், நிலைய அலுவலர் உதயகுமார் தலைமையில் விரைந்து சென்று தீயை பல மணி நேரம் போராடி அணைத்தனர். மின் கசிவால் தீ விபத்து ஏற்பட்டதாக கூறப்படுகிறது. தீ விபத்தால் ஏற்பட்ட சேதம் குறித்து உடனடியாக தகவல் எதுவும் கிடைக்கவில்லை. தீ விபத்து குறித்து தெப்பக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, விசாரித்து வருகின்றனர்.

Tags : fire ,cartel manufacture company ,
× RELATED கடைகளில் தீவிபத்து