×

மதுரை மாவட்டத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலருக்கு 2 பேர், ஊராட்சி மன்ற தலைவருக்கு 16 பேர் மனு தாக்கல்

மதுரை, டிச. 11:மதுரை மாவட்டத்தில் நேற்று ஒன்றிய கவுன்சிலருக்கு 2 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு 16 பேர், கிராம வார்டு உறுப்பினர் பதவிக்கு 54 பேரும் மனு தாக்கல் செய்துள்ளனர். மதுரை மாவட்ட ஊரக உள்ளாட்சி அமைப்புகளுக்கான வேட்பு மனு தாக்கல் கடந்த 9ம் தேதி துவங்கியது. நேற்று முன்தினம் கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 23 பேரும், ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 85 பேர் மனு தாக்கல் செய்திருந்தனர். இந்நிலையில் இரண்டாம் நாளாக நேற்று நடந்த வேட்புமனு தாக்கலில் மதுரை கிழக்கு ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், ஊராட்சி மன்ற தலைவர் பதவிக்கு மதுரை கிழக்கில் 7 பேரும், திருப்பரங்குன்றம், வாடிப்பட்டியில் தலா ஒருவரும், மேலூரில் 3 பேரும், கொட்டாம்பட்டியில் 4 பேரும் என 16 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  அதே போன்று கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 54 பேர் வேட்பு மனு தாக்கல் செய்தனர்.  மதுரை மாவட்டத்தில் இதுவரை மொத்தம், ஓன்றிய கவுன்சிலர் பதவிக்கு 2 பேரும், கிராம ஊராட்சி தலைவர் பதவிக்கு 39 பேரும், கிராம ஊராட்சி வார்டு உறுப்பினர் பதவிக்கு 139 பேர் மனு தாக்கல் செய்துள்ளனர்.  இதுவரை மாவட்ட கவுன்சிலர் பதவிக்கு இதுவரை யாரும் மனு தாக்கல் செய்ய வரவில்லை.

Tags : Madurai ,council leader ,
× RELATED நாடு முழுவதும் தொற்று பாதித்த...