×

போச்சம்பள்ளியில் கம்பளி விற்பனை ஜோர்

போச்சம்பள்ளி, டிச.11: போச்சம்பள்ளியில் கடந்த 10 நாட்களாக, கடும் குளிர் வாட்டி வதைத்து வருகிறது. அதிகாலையில் தோன்றும் மூடுபனி, காலை 11 மணி வரை நீடிக்கிறது. இதனால், சாலையில் எதிரே வரும் வாகனங்கள் தெரியாமல், முகப்பு விளக்குகளை எரியவிட்டபடி செல்கின்றனர். இந்நிலையில், பனியின் தாக்கத்தால் போச்சம்பள்ளி பகுதியில் கம்பளி விற்பனை அதிகரித்துள்ளது. வியாபாரிகள் அங்கங்கே சாலையோரம் கடைகள் வைத்து, பல வண்ணங்களில் பெட்ஷீட் மற்றும் கம்பளி போர்வைகளை விற்பனை செய்து வருகின்றனர். இதை பொதுமக்கள் ஆர்வத்துடன் வாங்கி செல்கின்றனர்.

Tags : Bochampally ,
× RELATED ஈரோட்டில் பனி பொழிவு அதிகரிப்பு : ஸ்வட்டர்,கம்பளி விற்பனை சூடுபிடித்தது