×

தொப்பூர் அருகே அரசு பள்ளி வகுப்பறைகளுக்கு சிசிடிவி கேமரா பொருத்தம்

தர்மபுரி, டிச.11: தொப்பூர் உம்மியம்பட்டி அரசு நடுநிலைப்பள்ளியில் அனைத்து வகுப்புகளுக்கும், சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டு கண்காணிக்கப்படுகிறது. தொப்பூர் அருகே உம்மியம்பட்டி கிராமத்தில் இயங்கி வரும் அரசு நடுநிலைப்பள்ளியில் எல்கேஜி முதல் 8ம் வகுப்பு வரை 290 மாணவ, மாணவிகள் படிக்கின்றனர். உம்மியம்பட்டி, செட்டிக்கோம்பை, கணவாய்மேடு, காலனி, ரயில்வே ஸ்டேஷன், பிக்கப் அணைக்கட்டு, கொம்புகாரன் கொட்டாய் ஆகிய பகுதிகளிலிருந்து மாணவ, மாணவிகள் இப்பள்ளியில் படிக்கின்றனர். தனியார் பள்ளிக்கு இணையாக கற்பித்தல், சீருடை, காலணி உள்ளிட்டவற்றை உருவாக்கி வருகின்றனர். தலைமை ஆசிரியர் நரசிம்மன் உள்பட 11 ஆசிரியர்கள் பணியாற்றுகின்றனர். இப்பள்ளிக்கு மூன்று கட்டிடம் உள்ள நிலையில், மேலும் 4 வகுப்பறை வசதிகள் வேண்டும் என கல்வித்துறையிடம் கேட்கப்பட்டுள்ளது.இந்நிலையில், பள்ளியின் வகுப்பறைகள் முழுவதும், 8 முக்கிய இடத்தில் ₹32 ஆயிரம் மதிப்பில் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளது. 24 மணிநேரமும் கணினியில் பதிவாகும் வகையில் அமைக்கப்பட்டுள்ளது. மாணவர்கள் படிக்கும் விதம், ஆசிரியர் பாடம் நடத்துவிதம் என மாணவர்களின் கல்வி வளர்ச்சிக்கு, இந்த கேமராக்கள் பயன்படுத்த பொருத்தப்பட்டுள்ளது. தொப்பூர் ஊராட்சி செயலர் கோவிந்தன், சிசிடிவி கேமரா வாங்க ₹18 ஆயிரம் அன்பளிப்பாக வழங்கியுள்ளார்.  அரசு பள்ளியில் அனைத்து வகுப்பறைகளுக்கும் சிசிடிவி கேமரா பொருத்தப்பட்டுள்ளதற்கு,
மாவட்ட கல்வி அதிகாரிகள் மற்றும் பொதுமக்கள் பாராட்டு தெரிவித்துள்ளனர்.

Tags : government school classrooms ,Toppur ,
× RELATED பெங்களூருக்கு லாரியில் கடத்தி சென்ற 20 டன் ரேஷன் அரிசி தோப்பூரில் பறிமுதல்