×

காரிமங்கலம் மலைக்கோயிலில் கார்த்திகை தீப விழா

காரிமங்கலம், டிச.11:காரிமங்கலம் மலைக்கோயிலில் நடந்த கார்த்திகை தீப திருவிழாவில், திரளான பக்தர்கள் கலந்து கொண்டனர். காரிமங்கலம் அருணேசுவரர் கோயிலில் கார்த்திகை தீப திருவிழா நேற்று நடந்தது. இதையொட்டி, அதிகாலை 4 மணிக்கு, சுவாமிக்கு சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள்  நடந்தது. தொடர்ந்து 5 மணிக்கு பரணி தீபம் ஏற்றப்பட்டது. மாலை 6 மணிக்கு, மலை உச்சியில் அண்ணாமலையார் தீபம் என்னும் மகாதீபம் ஏற்றப்பட்டது. இதனைத்தொடர்ந்து பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது. மேலும், இந்த மலைக்கோயிலுக்கு அருகே புதிதாக கும்பாபிஷேகம் செய்யப்பட்ட ஸ்ரீ குபேரலிங்கம், மற்றும் ஸ்ரீ ஆகாசலிங்கம் கோயில்களிலும் கார்த்திகை தீபத்தையொட்டி சிறப்பு அபிஷேகம், அலங்காரம், பூஜைகள் நடத்தப்பட்டு பிரசாதமும் வழங்கப்பட்டது. நிகழ்ச்சியில் சுற்றுவட்டார பகுதியைச் சேர்ந்த திரளான பக்தர்கள் கலந்துகொண்டு, சுவாமி தரிசனம் செய்தனர். இந்த கார்த்திகை தீபத் திருவிழாவை முன்னிட்டு மலைக்கோயில் அடிவாரத்தில் அமைந்துள்ள, வள்ளலார் குடில் சார்பாக பக்தர்களுக்கு அன்னதானம் வழங்கப்பட்டது.

Tags : Kartikam Deepa Ceremony ,
× RELATED நிவர் புயல் எதிரொலியால் மாவட்டம் முழுவதும் மழை மரங்கள் முறிந்து விழுந்தன