வாடகை கொடுக்காததால் வாலிபர் மீது தாக்குதல் 2 பேர் கைது

திருப்பூர், டிச. 11:திருப்பூரில் குடியிருந்த வீட்டிற்கு வாடகை கொடுக்காததால், தாக்குதல் நடத்திய 2 பேரை போலீசார் கைது செய்தனர். தேனி மாவட்டத்தை சேர்ந்தவர் மணிகண்டன் (28). இவர் திருப்பூர் கொங்கு நகர் பகுதியை அடுத்த பிரிஜ்வே காலனி பகுதியில் முத்துராஜா என்பவருக்கு சொந்தமான வீட்டில் வாடகைக்கு இருந்துள்ளார். கடந்த சில மாதங்களாக மணிகண்டன் வாடகை கொடுக்கவில்லை என கூறப்படுகிறது. மேலும் முத்துராஜாவின் வீட்டை மணிகண்டன் கடந்த சில நாட்களுக்கு முன்பு பூட்டி சென்றுள்ளார்.  இந்நிலையில் மணிகண்டனிடம் வாடகை பற்றி கேட்பதற்காக முத்துராஜா மற்றும் அவரிடம் பணிபுரியும் பாண்டியராஜன் (40), ராஜீவ்(35) ஆகியோர் சென்றுள்ளனர். இது குறித்து கேட்டபோது தகராறு ஏற்பட்டுள்ளது. இதில் ஆத்திரமடைந்த பாண்டியராஜன், ராஜீவ் ஆகியோர் சேர்ந்து மணிகண்டனை கடுமையாக தாக்கியுள்ளனர். காயமடைந்த மணிகண்டனை அருகிலிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையில் சேர்த்துள்ளனர்.இது குறித்து மணிகண்டன் வடக்கு போலீசில் புகார் அளித்தார். புகாரின் பேரில், ேபாலீசார் வழக்குப்பதிவு செய்து பாண்டியராஜன், ராஜீவ் ஆகியோரை நேற்று முன்தினம் கைது செய்து சிறையிலடைத்தனர்.

Tags : persons ,
× RELATED கறம்பக்குடியில் இருவரை கத்தியால் குத்திய வாலிபர் கைது