பள்ளியில் விளையாட்டு விழா

மதுரை, டிச. 9: மதுரை பழங்காநத்தம் ரூபி மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியின் 37வது விளையாட்டு விழா நடந்தது. பள்ளியின் முதல்வர் வெங்கடேசன் தலைமை வகித்தார். பல்வேறு போட்டிகளில் பங்கேற்று வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு மதுரை மாநகர் துணை கமிஷனர் பழனிச்சாமி பரிசுகளை வழங்கினார். ஏற்பாடுகளை பள்ளியின் பொருளாளர் சாந்தாதேவி சங்கரபாண்டியன் செய்தார். இதில் ஆசிரியர்கள், ஆசிரியைகள், மாணவ, மாணவியர்கள் மற்றும் பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Tags : school ,Sports Festival ,
× RELATED சைனிக் பள்ளியில் விளையாட்டு விழா