×

நகராட்சி நடுநிலைப்பள்ளியில் இடிந்து விழும் நிலையில் சமையல் அறை

காங்கயம், டிச.9: காங்கயம் நகராட்சி, பாரதியார் நகரில் உள்ள நடுநிலைப்பள்ளியில் முன்பு பயன்படுத்தப்பட்ட வந்த  சமையலறை கட்டடம் சேதமடைந்து இடிந்து விழும் நிலையில் இருந்ததால், வேறு ஒரு அறையில் சமையல் செய்யப்பட்டு வருகிறது. ஆனால், கைவிடப்பட்ட சேதமடைந்த இந்த அறையை இன்னும் இடித்து அகற்றாமல் அப்படியே வைத்துள்ளனர். இதற்கு அருகிலேயே மாணவர்கள் படிக்கும் வகுப்பறைகள் செயல்பட்டு வருவதால், ஏதேனும் விபரீதம் நிகழ்வதற்குள் சேதமடைந்த இந்த சிறிய கட்டடத்தை அகற்றுவதற்கு கல்வித்துறை நடவடிக்கை எடுக்க வேண்டும் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Kitchen ,middle school ,
× RELATED கிச்சன் டிப்ஸ்