×

மாவட்டத்தில் 493 உள்ளாட்சி பதவிகளுக்கு நேரடி தேர்தல்

ஊட்டி,  டிச.9:  நீலகிரி மாவட்டத்தில் 493 உள்ளாட்சி பதவிகளுக்கான நேரடி தேர்தல்  நடக்கிறது. குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும் 27ம்  தேதியும், ஊட்டி, கூடலூர் ஒன்றியங்களுக்கு 30ம் தேதியும் வாக்குபதிவு  நடைபெற உள்ளது.
தமிழகத்தில் 27 மற்றும் 30ம் தேதிகளில் ஊரக உள்ளாட்சி  பகுதிகளுக்கான வாக்குபதிவு நடைபெற உள்ளது. நீலகிரி மாவட்டத்தில் 6 மாவட்ட  ஊராட்சி வார்டு உறுப்பினர்கள், 59 ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள், 35 கிராம  ஊராட்சி தலைவர்கள், 393 ஊராட்சி வார்டு உறுப்பினர்கள் என மொத்தம் 493  உறுப்பினர்கள் நேரடி தேர்தல் மூலமாக தேர்வு செய்யப்பட உள்ளனர். 4 ஊராட்சி  ஒன்றிய தலைவர்கள், 4 ஊராட்சி ஒன்றிய துணை தலைவர், 35 கிராம ஊராட்சி துணை  தலைவர், 1  ஊராட்சி தலைவர், 1 துணை தலைவர் ஆகியோர் மறைமுகமாகவும் தேர்வு  செய்யபட உள்ளனர்.

 குன்னூர், கோத்தகிரி ஊராட்சி ஒன்றியங்களுக்கு  முதல்கட்டமாக 27ம் தேதியும், ஊட்டி, கூடலூர் ஊராட்சி ஒன்றியங்களுக்கு வரும்  30ம் தேதியும் வாக்குபதிவு நடைபெற உள்ளது. காலை 9 மணி முதல் மாலை 5 மணி  வரை வாக்குபதிவு நடைபெறும்.
இதற்கான வேட்பு மனுதாக்கல் இன்று (9ம்  தேதி) துவங்குகிறது. வேட்புமனு தாக்கல் செய்ய கடைசி நாள் வரும் 16ம் தேதி  ஆகும். வேட்புமனுக்கள் 17ம் தேதி பரிசீலனை செய்யப்படும். 19ம் தேதி  வேட்புமனுக்கள் திரும்ப பெறலாம். வாக்கு எண்ணிக்கை 2ம் தேதி காலை 8 மணிக்கு  துவங்கிறது. தேர்ந்தெடுக்கப்பட்ட வார்டு உறுப்பினர்கள் 6ம் தேதி  பதவியேற்பு நடைபெறும். தொடர்ந்து 11ம் தேதி மாவட்ட ஊராட்சி தலைவர், துணை  தலைவர், ஊராட்சி ஒன்றிய தலைவர், துணை தலைவர், கிராம ஊராட்சி துணை தலைவர்  ஆகியோரை தேர்வு செய்ய மறைமுக தேர்தல் நடக்கிறது.


Tags : election ,Government ,district ,
× RELATED நகர்புறங்களில் வசிக்கும் மக்கள்...