தர்மபுரியில் தீண்டாமை ஒழிப்பு முன்னணி கூட்டம்

தர்மபுரி, டிச.9: தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணியின், தர்மபுரி மாவட்ட குழு கூட்டம் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அலுவலகத்தில் நடந்தது.  கூட்டத்திற்கு மாவட்ட தலைவர் ராமச்சந்திரன் தலைமை வகித்தார். மாவட்ட செயலாளர் வக்கீல் மாதையன், மாவட்ட பொருளாளர் கோவிந்தசாமி, அம்பேத்கர் அறக்கட்டளை நிர்வாகி ராஜசேகர், இன்சூரன்ஸ் ஊழியர் சங்க கோட்ட இணைசெயலாளர் மாதேஸ்வரன் ஆகியோர் பேசினர். கூட்டத்தில், தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி சார்பில், தர்மபுரி மாவட்டத்தில் 82 கிராமங்களில் தீண்டாமையின் வடிவங்கள் குறித்து ஆய்வு மேற்கொள்வது. பஞ்சமி நிலங்களை தலித்ம க்களுக்கு வழங்கக் கோரி வரும் பிப்ரவரி 25ம் தேதி, சென்னை கோட்டையை முற்றுகையிடும் போராட்டத்தில், தர்மபுரி மாவட்டத்தில் இருந்து 500 பேர் பங்கேற்பது என முடிவு செய்யப்பட்டது. மேலும், பென்னாகரம் கள்ளிபுரம், ஜடையம்பட்டி தலித் மக்களுக்கு, இலவச மனைபட்டா பட்டா வழங்க வேண்டும்.  காரிமங்கலம் அம்பேத்கர் நகரில் வசிக்கும் அனைத்து மக்களுக்கும் உடனடியாக பட்டா வழங்க வேண்டும் என்பது உள்ளிட்ட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Tags : Untouchability Leadership Meeting ,Dharmapuri ,
× RELATED தர்மபுரி நகரில் கடும் பனிபொழிவு