வி.கே.புரத்தில் பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணி

வி.கே.புரம். டிச.9: வி.கே.புரம் நகராட்சியும் புனித மரியன்னை பள்ளியும் இணைந்து பிளாஸ்டிக் ஒழிப்பு விழிப்புணர்வு பேரணியை நடத்தியது.  வி.கே.புரம் புனித மரியன்னை பள்ளியிலிருந்து நகராட்சி வரை நடந்த இந்த விழிப்புணர்வு பேரணிக்கு நகராட்சி ஆணையாளர் காஞ்சனா தலைமை வகித்து தொடங்கி வைத்தார். நகராட்சி சுகாதார ஆய்வாளர் கணேசன் முன்னிலை வகித்தார். பேரணியில் புனித மரியன்னை பள்ளி மாணவர்கள் கலந்து கொண்டனர்.  பேரணி பள்ளியிலிருந்து புறப்பட்டு மெயின் ரோடு வழியாக சென்று நகராட்சியை அடைந்து, மீண்டும் பள்ளியை அடைந்தது. மாணவர்கள் வரும் வழியில் சேகரிக்கப்பட்ட 12 கிலோ பிளாஸ்டிக் கழிவுகளை நகராட்சியில் ஒப்படைத்தனர். இதில் பள்ளி என்சிசி திட்ட அதிகாரி ஜோசப்ராஜா, என்எஸ்எஸ் திட்ட அதிகாரி அன்னைராஜா, பசுமைபடை திட்ட அதிகாரி சுப்பையா, இந்தியா தூய்மை திட்ட மேற்பார்வையாளர் ஈஸ்வரன் உட்பட பலர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED விழிப்புணர்வு பேரணி