×

முசிறி கிராமத்தில் கனரக வாகன தொழிற்பேட்டை

திருச்செங்கோடு, டிச.5:திருச்செங்கோடு தாலுகா முசிறி கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தை கலெக்டர் பார்வையிட்டார். திருச்செங்கோடு அருகே  முசிறி மற்றும் புத்தூர் கீழ்முகம் கிராமத்தில் அமைக்கப்பட்டுள்ள கனரக வாகன தொழிற்பேட்டை வளாகத்தை, மாவட்ட கலெக்டர் மெகராஜ் நேற்று கனரக வாகன தொழில்முனைவோருடன் சென்று ஆய்வு செய்தார். அப்போது, கனரக வாகன தொழிற்பேட்டையின் மின்தேவைக்காக அமைக்கப்பட்டுள்ள துணை மின்நிலையத்தை பார்வையிட்டு, மரக்கன்றுகளை நட்டு வளர்க்குமாறு கனரக வாகன தொழில் முனைவோருக்கு அறிவுறுத்தினார்.  பின்னர், மல்லசமுத்திரம் ஊராட்சி ஒன்றியம், பருத்திப்பள்ளி சமத்துவபுரத்தில் பயன்பாடற்ற ஆழ்துளை கிணறு பாதுகாப்பான முறையில் மூடப்பட்டுள்ளதை பார்வையிட்டார். அப்போது, திருச்செங்கோடு தாசில்தார் கதிர்வேல், வட்டார வளர்ச்சி அலுவலர்கள், அரசுத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.


Tags : Vehicle Workshop ,Musiri Village ,
× RELATED 30ம் தேதி விவசாயிகள் குறைதீர் கூட்டம்