×

பஸ் கண்ணாடியை உடைத்த 4 பேர் கைது

பெரியகுளம், டிச.5: பெரியகுளம் அருகே சில்வார்பட்டி கிழக்குத் தெருவைச் சேர்ந்தவர் முத்துராமலிங்கம்(35). இவர் அரசு பஸ் டிரைவராக பணியாற்றி வருகிறார். நேற்று முன்தினம் இவர் பஸ்சை திருச்சியிலிருந்து குமுளி நோக்கி ஓட்டி சென்றுள்ளார். பெரியகுளம் அருகே லெட்சுமிபுரம் அருகே சென்ற போது டூவீலரில் வந்த 4 பேர் பஸ்ைச நிறுத்தி பஸ் கண்ணாடியை உடைத்து டிரைவருக்கு கொலை மிரட்டல் விடுத்துள்ளனர். இதுகுறித்து பஸ் டிரைவர் கொடுத்த புகாரின் பேரில் பெரியகுளம் தென்கரை போலீசார் வழக்குப்பதிவு செய்து பஸ் கண்ணாடியை உடைத்த சருத்திபட்டி இந்திரா காலனி சேர்ந்த செல்லத்துரை(22), மோகன்தாஸ்(22), ஆனந்த கண்ணன்((19) ஆகியோரை சிறையில் அடைத்தனர். இவ்வழக்கில் கைது செய்யப்பட்ட 17 வயது சிறுவனை மதுரை சிறார் சிறையில் அடைத்தனர்.

Tags :
× RELATED நான்கு அம்ச கோரிக்கை வலியுறுத்தி பாம்பனில் தடையை மீறி போராட்டம்