×

பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா

தர்மபுரி, நவ.5: தர்மபுரி பச்சமுத்து நர்சிங் கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா நேற்று நடந்தது. விழாவிற்கு கல்வி நிறுவனங்களின் தலைவர் பாஸ்கர் தலைமை வகித்தார். துணைத்தலைவர் சங்கீத் குமார், சசிகலா பாஸ்கர், பிரியா சங்கீத்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். தர்மபுரி தனியார் மருத்துவமனைகளின் தலைவர்கள் டாக்டர் தனசேகரன், விமலன், தமிழ்நாடு மெர்கென்டைல் வங்கி, தர்மபுரி கிளை மேலாளர் அனந்த சுபாகரன் ஆகியோர் பேசினர். நிகழ்ச்சியில், கல்லூரி முதல்வர் நீலா, மாணவி பிரதிபா, நந்தினி பிரியா மற்றும் மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர். இந்நிகழ்ச்சியில், முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு  செயல்விளக்கம் காண்பிக்கப்பட்டது. விழாவில் கல்லூரி மாணவர்கள், பெற்றோர்கள் கலந்து கொண்டனர்.


Tags : College of Nursing ,
× RELATED சோனா கல்லூரியில் முதலாமாண்டு வகுப்பு தொடக்க விழா