×

கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி

கடத்தூர், நவ.5: ஊழல் விழிப்புணர்வு வாரத்தை முன்னிட்டு, கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில், ஊழல் எதிர்ப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது. இதையொட்டி பள்ளி மாணவர்கள் உறுதிமொழி ஏற்கும் நிகழ்ச்சி நடந்தது. இந்நிகழ்ச்சிக்கு கிரீன் பார்க் கல்வி நிறுவனங்களின், நிர்வாக அலுவலர் ராஜா தலைமை வகித்தார். அகில இந்திய வானொலியின், தர்மபுரி பண்பலை நிகழ்ச்சி இயக்குநர் ஸ்ரீரங்கம், முரளி ஆகியோர் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு ‘லஞ்சம் தவிர், நெஞ்சம் நிமிர்’ என்ற தலைப்பில் பேசினர். பின்னர் மாணவர்கள் ஊழல் விழிப்புணர்வு பதாகைகளை ஏந்திக்கொண்டு, ஊழல் எதிர்ப்பு உறுதிமொழி எடுத்துக்காெண்டனர். இந்நிகழ்ச்சியில், பூவிழி முனிரத்தினம், முதல்வர், ஒருங்கிணைப்பாளர்கள், ஆசிரியர்கள், மாணவர்கள் மற்றும் பெற்றாேர்கள்  கலந்துகொண்டனர்.

Tags : Kadathur Green Park School ,
× RELATED கடத்தூர் கிரீன்பார்க் பள்ளியில் யோகா தினம் கொண்டாட்டம்