×

வாத்தியார் கொட்டாய் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம்

பாப்பாரப்பட்டி, நவ.5: பென்னாகரம் அருகே வாத்தியார் கொட்டாய் பகுதியில் தாழ்வாக செல்லும் மின் கம்பியால் விபத்து அபாயம் ஏற்பட்டுள்ளது.  பென்னாகரம் வட்டம் தித்தியோப்பனஹள்ளி பஞ்சாயத்துக்குட்பட்ட வாத்தியார் கொட்டாய் பகுதியில் 500க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இப்பகுதி மக்களின் மின் தேவைகளுக்காக, அமைக்கப்பட்ட மின் கம்பிகள், விவசாய நிலங்கள் வழியாக தாழ்வாக செல்வதால், விவசாயிகள் மற்றும் மக்கள் விபத்தில் சிக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

இது குறித்து மின் வாரியத்திடம் மக்கள் பல முறை புகார் கூறியும் நடவடிக்கை எடுக்காமல் மெத்தன போக்கு காட்டி வருவதாக மக்கள் குற்றச்சாட்டு தெரிவித்துள்ளனர். எனவே மின் விபத்து ஏற்படுவதற்குள், தழ்வாக செல்லும் மின் கம்பிகளை சீரமைக்க அதிகாரிகள் விரைவில் நடவடிக்கை எடுக்க ேவண்டும் என மக்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.


Tags : accident ,area ,Vadaiyar Kottai ,
× RELATED சாலையோரங்களில் கழிவுகளுக்கு தீ வைப்பதால் விபத்து அபாயம்