×

பழநியில் மாற்றுத்திறனாளிக்கு உணவு

பழநி, டிச. 5: உலக மாற்றுத்திறனாளிகள் தினத்தை முன்னிட்டு பழநி வட்ட சட்டப்பணிகள் குழு சார்பில் கோகுலம் ஆதரவற்றோர் இல்லத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கு மதிய உணவு வழங்கப்பட்டது. தொடர்ந்து மாற்றுத்திறனாளிகளுக்கு சட்டப்பாதுகாப்பு, அரசின் திட்டங்கள், சலுகைகள், அதனை பெறுவதற்கான வழிமுறைகள், சட்டங்கள் உள்ளிட்டவை குறித்து எடுத்துரைக்கப்பட்டன. இந்நிகழ்ச்சியில் சார்பு நீதிபதி கோதண்டராஜ், மாவட்ட உரிமையியல் நீதிபதி அம்பிகா, நீதித்துறை நடுவர் ரகுபதிராஜா, விரைவு நீதிமன்ற நீதித்துறை நடுவர் மணிகண்டன் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

Tags :
× RELATED வியாழக்கிழமைகளில் சாய் பாபாவிற்கு படைக்கவேண்டிய உணவு!!