×

ஆழ்வார்குறிச்சியில் புதிய சார் பதிவாளர் அலுவலகம்

கடையம், டிச. 5: கடையம் பகுதியைச் சேர்ந்த பொதுமக்கள் ஆர்டிஓ நேர்முக உதவியாளர் அருணாசலத்திடம் அளித்துள்ள மனுவில் கூறியிருப்பதாவது: கடையம் சார்பதிவாளர் அலுவலகம் ராமநதி சாலையில் அமைந்துள்ளது. தற்போது கடையம் சார்பதிவாளர் அலுவலகத்தில் 24 வருவாய் கிராமங்களுக்கு பத்திரப்பதிவு நடந்து வருகிறது. இது தவிர திருமணபதிவு, சங்கங்கள் பதிவு ஆகியனவும் நடைபெறுகிறது. . இந்நிலையில் தென்காசி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ள ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்திற்குட்பட்ட மேலாம்பூர் பகுதி-1, மேலாம்பூர்-2, அடைச்சாணி, பள்ளக்கால் பொதுக்குடி, பனஞ்சாடி, ரெங்கச்சமுத்திரம், இடைகால் பகுதி-1, இடைகால் பகுதி-2 மற்றும் வெங்கடாம்பட்டி குறுவட்டத்திற்க்குட்பட்ட ராவுத்தப்பேரி ஆகிய பத்து கிராம சொத்துக்கள் அம்பாசமுத்திரம், முக்கூடல், வி.கேபுரம்  ஆகிய சார்பதிவகங்களில் பத்திர பதிவு  மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

தற்போது அம்பை, முக்கூடல், விகேபுரம் ஆகிய  மூன்று சார்பதிவாளர் அலுவலகங்களும் திருநெல்வேலி மாவட்டத்தில் சேர்க்கப்பட்டு விட்டதால் பத்து கிராமங்களில் உள்ள சொத்துகளும் அருகிலுள்ள கடையம் சார்பதிவாளர் அலுவலகத்திற்கே செல்லும் நிலை உள்ளதால் அவ்வலுவலகத்தில் மேலும் கூடுதல் பணிச்சுமை ஏற்படும் அவல நிலை உள்ளது.எனவே ஆழ்வார்குறிச்சி குறுவட்டத்திற்கு உட்பட்ட பத்து கிராமங்களையும் கடையத்தில் ஏற்கனவே பத்திரபதிவில் உள்ள ஆழ்வார்குறிச்சி பகுதி-1 ,ஆழ்வர்குறிச்சி பகுதி-2, சிவசைலம், பாப்பான்குளம் ஆகிய  நான்கு கிராமத்தையும் கூடுதலாக சேர்த்து 14 கிராமங்களுக்கும் பத்திர பதிவு மற்றும் திருமணபதிவு, சங்கபதிவு ஆகியவற்றினை மேற்கொள்ள பொதுமக்களின் வசதியாக, ஆழ்வார்குறிச்சியில் புதிய சார்பதிவாளர் அலுவலகம் அமைக்க வேண்டும். இவ்வாறு  தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags : Office ,Registrar of Deputies ,
× RELATED கலெக்டர் அலுவலகத்தில் கலைநிகழ்ச்சி