ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் சுவர் இடிந்து விழுந்ததில் கணவன், மனைவி படுகாயம்

ஜெயங்கொண்டம், டிச. 3: ஜெயங்கொண்டம் அருகே வீட்டின் சுவர்கள் விழுந்ததில் கணவன், மனைவி காயமடைந்து அரசு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டம் அருகே சொக்கலிங்கபுரம் காலனி தெருவை சேர்ந்தவர் முருகன். இவரது மனைவி தங்கமணி (55). இருவரும் கூலி வேலை செய்து வருகின்றனர்.

நேற்று காலை 8 மணியளவில் தங்கமணி ஓட்டு வீட்டின் சுவர் தீடிரென முருகன் வீட்டின் சுவர் மீது சாய்ந்தது. இதில் வீட்டில் சாப்பிட்டு கொண்டிருந்த முருகன் மற்றும் அவரது மனைவி கவிதா (35) மீது சுவர் விழுந்தது. இதில் படுகாயமடைந்த முருகன், அவரது மனைவி கவிதா ஆகிய இருவரையும் உடனடியாக மீட்டு மீன்சுருட்டி ஆரம்ப சுகாதார நிலையத்தில் சிகிச்சைக்காக சேர்க்கப்பட்டனர். பின்னர் மேல்சிகிச்சைக்காக ஜெயங்கொண்டம் அரசு மருத்துவமனையில் சேர்க்கப்பட்டனர். அங்கு அவர்களுக்கு சிகிச்சை அளிக்கப்பட்டு வருகின்றனர்.

Tags : house collapse ,Jayankondam ,
× RELATED போதை மாத்திரை விற்ற கணவன், மனைவி கைது