×

10 வீடுகளின் சுவர்கள் இடிந்து சேதம்

அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே உள்ள கோடங்குடி கோடங்குடி கிராமத்தில் ராஜாங்கம், ஆறுமுகம், நடராஜன், ராணி, ஆனந்தன் உள்ளிட்டோருக்கு சொந்தமான வீடுகள் கன மழையால் மண் சுவர்கள் கரைந்து  விழுந்தன. பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா ஜெமின் பேரையூர் கிராமத்தை சேர்ந்த குழந்தை மனைவி அன்னபட்டு என்பவருடைய  ஓட்டு வீடு ஒரு பக்க சுவரும். கீழ உசேன் நகரம் கிராமத்தை சேர்ந்த ராஜா மனைவி மாலதியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும்,  தெரணி கிராமத்தை சேர்ந்த தங்கவேல் மனைவி தமிழ்மணியின் கூரை வீட்டின் ஒரு பக்க சுவரும், நொச்சிகுளம் கிராமத்தைச் சேர்ந்த பெரியசாமி மகன் சுப்பிரமணி கூரை வீடு ஒரு பக்க சுவரும், திம்மூரை சேர்ந்த மருதமுத்து மகன்  சின்னகண்ணு கூரைவீடு ஒரு பக்க சுவர் இடிந்து சேதமடைந்தது.

நைனார் ஏரி உடையும் அபாயம்

ஜெயங்கொண்டம் அருகே கழுவன் தோண்டி கிராமத்தில் உள்ளது நைனார் ஏரி. சுமார் 20க்கும் மேற்பட்ட ஏக்கர் அளவில் உள்ள இந்த ஏரியால் பெரியவளையம், கழுவன் தோண்டி, தேவமங்கலம் உள்ளிட்ட பல கிராம விவசாயிகள் பயனடைந்தனர். இந்த ஏரியில் தற்பொழுது மதகு வைக்கப்பட்டு தண்ணீரை நிரப்பி வைப்பதற்காக மதகு உயர்த்தப்பட்டுள்ளது. இதனால் தண்ணீர் ஏரிக்குள் உள்ளே பெருக்கெடுத்துள்ளது. ஆனால் தண்ணீர் வெளியேற வழி இல்லை. இதனால் கரை உடையும் அபாயம் உள்ளது. ஊர்மக்கள் இதற்காக சிரமத்துடன் தண்ணீர் வெளியேறும் வழியில் மண்ணைப் போட்டு கரையை உயர்த்தி வருகின்றனர்.

Tags : houses ,
× RELATED வருசநாடு அருகே விளை பொருட்களை கொண்டு செல்வதில் சிரமம்