×

ரூ.210 கோடி பங்காக உயர்த்த அரசு எடுத்துள்ள முடிவுக்கு கண்டனம்

பெரம்பலூர், நவ.22: பெரம்பலூர் சர்க்கரை ஆலையின் அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.10 மதிப்புள்ள 21 கோடி பங்குகளாக உயர்த்த அரசு எடுத்திருக்கும் முடிவுக்கு முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டத்தில் வன்மையாக கண்டனம் தெரிவிக்கப்பட்டுள்ளது. பெரம்பலூர் மாவட்டம், வேப்பந்தட்டை தாலுகா, எறையூரில் உள்ள ஜவஹர்லால் நேரு பொதுத்துறை சர்க்கரை ஆலையில் நடப்பு அரவைப் பருவத்திற்கான முன்மாதிரி பங்குதாரர்கள் கூட்டம் சர்க்கரை ஆலையின் கூட்டமன்ற வளாகத்தில் நேற்று காலை நடைபெற்றது. மாவட்ட வருவாய் அலுவலரும், சர்க்கரை ஆலையின் தலைமை நிர்வாகியுமான ஜெய்னுலாப்தீன் தலைமை வகித்தார். கூட்டத்தில் தமிழ்நாடு சர்க்கரைக் கழக பொது மேலாளர் விஜயா, கம்பெனி செய லாளர் ராஜகோபால், தலைமை பொறியாளர் பிரபாகரன், தலைமை கரும்பு அலுவலர் மாமுண்டி ஆகியோர் முன்னிலை வகித்தனர். சர்க்கரை ஆலையின் பங்குதாரர்கள் மற்றும் விவசாயிகள் சங்க பிரதிநிதிகளான செந்துறை ஞானமூர்த்தி , நமங்குணம் சீனிவாசன், தமிழக விவசாயிகள் சங்க மாநிலச் செயலாளர் ராஜா சிதம்பரம், மலையாளப்பட்டி வரதராஜன், தமிழ்நாடு விவசாயிகள் சங்க முன்னாள் மாவட்ட செயலாளர் வேணுகோபால், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாநில செயலாளர் ராசேந்திரன், துங்கபுரம் முருகேசன், ராமலிங்கம், தமிழ்நாடு கரும்பு விவசாயிகள் சங்க மாவட்ட தலைவர் சக்திவேல், பெருமாள் மற்றும் பலர் கலந்து கொ ண்டனர்.

கூட்டத்தில் 2015-2016, 2016-2017 அரவைப் பருவத்திற்கு அரசு அறிவித்த விலை டன் ஒன்றுக்கு ரூ2,750. இதில் ரூ.2,300 மட்டுமே வழங்கிவிட்டு பாக்கித்தொகை டன்னுக்கு ரூ.450ஐ வரும் பேரவைக் கூட்டத்திற்குள் வழங்க வேண்டும் என இந்த கூட்டம் அரசை கேட்டுக் கொள்கிறது. பெரம்பலூர் சர்க்கரை ஆலையில் உள்ள காலிப்பணியிடங்களுக்கு தற்காலிக பணியாளர்களை நியமித்து ஆலையை பெறும் நட்டத்திற்கு உள்ளாக்கும் நிலையை மாற்றி நிரந்தர பணியாளர்களை உடனே நியமிக்க வேண்டும் என இந்த கூட்டம் அரசை கேட்டுக்கொள்கிறது.ஆலையில் இணைமின் திட்டத்திற்கு விவசாயிகளிடம் பெறப்பட்ட பணத்திற்கு ஆதாயம் கிடைக்கும் வகையில், பங்குப் பத்திரமாக விவசாயிகளுக்கு பேரவை க் கூட்டத்திற்குள் வழங்க வேண்டும். அரவைப் பருவத்தில் மட்டும் மின்உற் பத்தி செய்யும் நிலையை மாற்றி ஆண்டு முழுதும் மின் உற்பத்தியை நடத்த வேண்டும் . வெட்டிய கரும்பை ஆலை வளாகத்தில் எடை போட்டவுடன் சம்பந்தப்பட்ட விவசாயிக்கு குறுஞ்செய்தி (எஸ்எம்எஸ்) தகவலை அனுப்பும் இணையதள வசதியை உடனே ஏற்படுத்த வேண்டும். வாரிசு தாரர்களுக்கு ஷேர் மாற்றத்தை தலைமை சர்க்கரைக் கழக அலுவலகத்தில் மாற்றும் நிலையை மாற்றி ஆலையின் கரும்பு கோட்ட அலுவலகத்தில் மாதத்தில் ஒருநாள் ஷேர் மாற்றம் செய்யும் முறையை கொண்டுவர வேண்டும். நிறுவனத்தின் தனது அங்கீகரிக்கப்பட்ட மூலதனத்தை ரூ.210 கோடி, அதாவது ரூ.10 மதிப்புள்ள 21 கோடி பங்குகளாக உயர்த்த அரசு எடுத்திருக்கும் முடிவை வண்மையாக கண்டிப்பது. இந்த பங்கு தொகையை விவசாயிகளின் பங்காக அறிவிக்க வேண்டும் என கோரிக்கைகள் முன் வைக்கப்பட்டன.

Tags : government ,
× RELATED ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் கம்பி...