×

மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி வார்டுகளில் போட்டியிட அதிமுகவினர் இன்று முதல் விருப்ப மனு

கேடிசி நகர், நவ. 22: நெல்லை மாநகர மாவட்ட அதிமுக செயலாளர் தச்சை கணேசராஜா விடுத்துள்ள அறிக்கை: தமிழகத்தில் மாநகராட்சி மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு மறைமுக தேர்தல் நடத்த அரசு முடிவு செய்துள்ளது. இந்நிலையில் மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் போட்டியிட வாய்ப்பு வேண்டி விருப்ப மனு அளித்துள்ளவர்கள், தாங்கள் சார்ந்த மாநகராட்சி வார்டு, நகராட்சி வார்டு மற்றும் பேரூராட்சி வார்டு உறுப்பினர் பதவிகளுக்கு அதிமுக சார்பில் வேட்பாளர்களாக போட்டியிட விருப்ப மனு அளிக்கலாம்.

இன்று (22ம்தேதி) காலை 10 மணி முதல் மாலை 5 மணி வரை மாநகர் மாவட்ட அதிமுக அலுவலகத்தில் ஏற்கனவே அறிவிக்கப்பட்ட கட்சி நிர்வாகிகளிடம் உரிய கட்டணத் தொகையை செலுத்தி விண்ணப்ப படிவத்தை பெற்று பூர்த்தி செய்து வழங்கலாம். மேயர், நகராட்சி தலைவர், பேரூராட்சி தலைவர் ஆகிய பதவிகளுக்கு ஏற்கனவே கட்டணம் செலுத்தி விருப்ப மனு அளித்தவர்கள், அதிமுக பொதுக்குழு முடிந்தவுடன் அதிமுக தலைமை அலுவலகத்தில் தாங்கள் செலுத்திய அசல் கட்டண ரசீதை காட்டி தொகை யை வருகிற 25ம் தேதி முதல் 29ம் தேதி வரை பெற்றுக் கொள்ளலாம். இவ்வாறு அந்த அறிக்கையில் கூறியுள்ளார்.

Tags : AIADMK ,corporation ,
× RELATED சட்டமன்றத் தேர்தலின் போது...