×

அரூரில் சாலை விரிவாக்கத்திற்கு பின்னும் தொடரும் விபத்துகள்

அரூர், நவ.22: அரூர் பழையப்பேட்டையிலிருந்து கச்சேரிமேடு வரை, 2.4 கிமீ சாலை ₹7.80 கோடி மதிப்பீட்டில் நான்கு வழி சாலையாக விரிவாக்கம் செய்யப்பட்டு வருகிறது. கச்சேரிமேடு முதல் பைபாஸ் சாலை வரை, சுமார் 20க்கும் மேற்பட்ட சாலையோர மரங்கள் வெட்டி அகற்றப்பட்டு, சாலை விரிவுபடுத்தப்பட்டு, சென்டர் மீடியன் அமைக்கும் பணிகள் நடைபெற்று வருகிறது. இந்நிலையில், 2.4கிமீ சாலையோரமும் வாகனங்கள் ஆக்கிரமித்து நிறுத்தப்படுகிறது. டிபார்ட்மெண்ட் ஸ்டோர், ஜவுளிகடைகள் முன்பும், பட்டறைகள், டீ கடைகள் ஆகியவற்றின் முன் இருசக்கர வாகனங்களும், லாரிகளும் சாலையோரம் நிறுத்தப்படுவதால் சாலை விரிவுபடுத்தியதற்கு முன்பு இருந்ததை விட, சாலைகள் குறுகலாக காணப்படுகிறது.

வாகனங்கள் ஒரு வழி சாலையில் செல்வது போல், ஒன்றன் பின் ஒன்றாக மட்டுமே செல்ல முடிகிறது. இதனால், அதிக அளவில் விபத்துகள் நடந்து வருவதாக மக்கள் குற்றம் சாட்டுகின்றனர்.  சாலையின் குறுக்கே அமைக்கப்பட்டுள்ள சென்டர் மீடியன் அளவு பெரியதாக இருப்பதாக  மக்கள் தெரிவித்துள்ளனர். எனவே கடைகளின் முன்பு நிறுத்தப்படும் இருசக்கர வாகனங்களை கட்டுப்படுத்தவும், போக்குவரத்து நெரிசலை சீரமைக்க போக்குவரத்து ேபாலீசார் நடவடிக்கை எடுக்க ேவண்டும் எனவும் வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

Tags : Accidents ,road widening ,
× RELATED விபத்துகளை தடுக்கும் வகையில்...