×

கஞ்சா விற்ற வாலிபர் கைது

தர்மபுரி, நவ.22: பாலக்கோடு போலீஸ் எஸ்ஐ வடிவேலு மற்றும் போலீசார், மூங்கம்பட்டி பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது மூங்கம்பட்டி ரயில்வே மேம்பாலம் அருகே, வாலிபர் ஒருவர் கஞ்சாவை பொட்டலமாக கட்டிக்கொண்டிருந்தார். இதை பார்த்த போலீசார் அவரை பிடித்து விசாரித்ததில், பாலக்கோடு பேகாரஅள்ளி பகுதியை சேர்ந்த வாசுதேவன்(23) என்பது தெரியவந்தது. பின்னர், அவரை கைது செய்து, அவரிடம் இருந்த அரை கிலோ கஞ்சாவை பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED கொடைக்கானல் அருகே மின்சாரம் தாக்கி இளைஞர் உயிரிழப்பு