×

7 லிட்டர் கள்ளச்சாராயம் பறிமுதல்

தர்மபுரி, நவ.22: பாலக்கோடு மகேந்திரமங்கலம் பகுதியில் கள்ளச்சாராயம் பதுக்கி வைத்து விற்பனை செய்வதாக, மாவட்ட எஸ்பி ராஜனுக்கு தகவல் வந்ததது. இதையடுத்து, மகேந்திரமங்கலம் போலீசார் தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது, பேடரஅள்ளி பகுயில் கள்ளச்சாராயம் விற்பனை செய்து கொண்டிருந்த பாலக்கோடு பகுதியை சேர்ந்த பழனி (30), கமலநாதன் (48) ஆகியோரை போலீசார் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 7 லிட்டர் கள்ளச்சாராயத்தையும், சாராய கடத்தலுக்கு பயன்படுத்திய டூவீலரையும் பறிமுதல் செய்தனர். இதேபோல், ஏ.பள்ளிபட்டி போலீசார் நடத்திய சோதனையில், புதுப்பட்டியை சேர்ந்த சின்னதங்கம்(40) என்பவர் அரசு மதுபானத்தை பதுக்கி வைத்து கூடுதல் விலைக்கு விற்றதாக கைது செய்யப்பட்டார். இவரிடம் இருந்து 7 மதுபாட்டில்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.

Tags :
× RELATED தூத்துக்குடியில் ஒரே நாளில் குண்டாசில் 7 பேர் கைது