×

மதுரை நகரில் நூதன முறையில் திருடும் வாலிபர் பொறி வைத்துள்ள காவல்துறை

மதுரை, நவ. 22: மதுரை நகரில் பொதுமக்களின் கவனத்தை திசை திருப்பி பொருட்களை திருடும் நபரை போலீசார் தேடி வருகின்றனர்.
மதுரை நகரில் உள்ள வீடுகள் மற்றும் வர்த்தக நிறுவனங்களில் நுழைந்து வாலிபர் ஒருவர், ‘தான் வாய் பேசமுடியாதவர், பல்வேறு உடல் உபாதைகளால் பாதிக்கப்பட்டிருக்கிறேன். ஏதேனும் நன்கொடை வழங்குங்கள்’’ என்ற வாசகங்கள் கொண்ட துண்டு பிரசுரங்களை வழங்குகிறார். இந்நிலையில் அங்கிருப்ேபாரின் கவனத்தை திசை திருப்பும் அவர், துண்டு பிரசுரத்தை அவர்கள் படித்து முடிப்பதற்குள் டேபிள்களில் இருக்கும் பணம், செல்போன் உள்ளிட்ட பொருட்களை நூதனமுறையில் திருடி விடுகிறார். எனவே, இந்த நபரை பற்றிய தகவல்கள் தெரியவந்தால் உடனடியாக நகர் குற்றப்பிரிவு உதவி கமிஷனர் 83000-19915, விளக்குத்தூண் இன்ஸ்பெக்டர் 94981-80208 ஆகியோரது எண்களில் தகவல் தெரிவிக்கலாம் என போலீஸ் வட்டாரங்கள் தெரிவித்துள்ளன.

Tags : city ,Madurai ,
× RELATED நீலாங்கரையில் கொள்ளை முயற்சியை தடுத்த போலீசுக்கு காவல் ஆணையர் பாராட்டு