×

தொடர்ந்து மழை பெய்யாததால் ஏரி, குளங்களில் தண்ணீர் இல்லாமல் கருகும் நாற்றுகள்

அரியலூர், நவ.20: தொடர்ந்து மழை பெய்யாததால் ஏரி குளங்களில் தண்ணீர் குறைந்துவிட்டது. இதனால் நடவு செய்ய போடப்பட்ட நாற்றங்களாலில் நாற்றுகள் தண்ணீர் இன்றி கருக தொடங்கியுள்ளது. இதனால் விவசாயிகள் வேதனையடைந்துள்ளனர்.
அரியலூர் மாவட்டத்தில் கடந்த 10 ஆண்டுகளாக மழையின்றி தொடர் வறட்சியால் விவசாயம் முற்றிலும் பொய்த்துபோனது. இதனால் விவசாயிகள் கூலி வேலைக்கு சென்றனர். இந்நிலையில் இந்த ஆண்டு தொடக்கத்தில் பல்வேறு இடங்களில் நல்ல மழை பெய்தது. இதனால் ஏரி குளங்களில் தண்ணீர் பெருக தொடங்கியது. இந்த தண்ணீரை வைத்து விவசாயிகள் ஏராளமானோர் நடவு பணியில் ஈடுபட்டனர். பல விவசாயிகளுக்கு நாற்று கிடைக்கவில்லை.

இதனால் அவர்கள் தங்கள் நிலத்தில் நாற்று போடும் பணியில் ஈடுபட்டனர். நாற்று போட்டுவிட்டு வயல்களை நடவு பணிக்கு தயார் செய்யும் பணியில் ஈடுபட்டனர். தற்போது நாற்று நல்ல முறையில் வளர்ந்து நடவு செய்யும் வகையில் தாயார் நிலையில் இருந்து வருகிறது. ஆனால் தொடர் மழை இல்லாமல் போனதால் ஏரி குளங்களில் தண்ணீர் குறைந்துவிட்டது. தற்போது உள்ள தண்ணீரை நம்பி நடவு செய்தால் கதிர் வரும் வரை கண்டிப்பாக நடவு கருகிவிடும் என்பதால் விவசாயிகள் நடவு பணியை தொடங்காமல் இருந்து வருகின்றனர். தற்போது நட்ட நடவுக்கு தண்ணீர் பாய்ச்சி வருகின்றனர். நடவு பணியை நிறுத்தியதால் நாற்றுகள் தற்போது கருக தொடங்கியுள்ளது. இன்னும் ஒரு வாரத்தில் நாற்றுகளை பறிக்கவில்லை என்றால் கண்டிப்பாக கருகிவிடும் என்பதில் சந்தேகமில்லை. இந்த நிலையை பார்த்து விவசாயிகள் கடும் வேதனையில் இருந்து வருகின்றனர்.

Tags : lake ,
× RELATED ஏரியின் நீர்வரத்து குறைந்ததால்...