×

வேளாண் அறிவியல் மையத்தில் மாணவர்களுக்கு செயல் விளக்கம்

தா.பழூர், நவ. 20:அரியலூர் மாவட்டம் தா.பழூர் அருகே சோழமாதேவி கிராமத்தில் அமைந்துள்ள கிரீடு வேளாண் அறிவியல் மையத்தை பற்றி தெரிந்துக்கொள்ள தஞ்சை தனியார் வேளாண் கல்லூரி மாணவர்கள் வந்திருந்தனர்.அவர்களுக்கு மையத்தின் மூத்த விஞ்ஞானி அழகுகண்ணன் வேளாண் அறிவியல் மைய செயல்பாடுகள் குறித்து கூறினார். விவசாயத்தில் புதிய தொழில்நுட்பங்களை பயன்படுத்தி விவசாயம் செய்தல் இயற்கை விவசாயத்தை ஊக்குவித்தல், பயிர் பாதுகாப்பு போன்ற தொழில்நுட்பங்களை பற்றி வேளாண் அறிவியல் மையத்தின் தொழில்நுட்ப வல்லுநர் ராஜ்கலா கூறினார். தோட்டக்கலை பயிர்கள் சாகுபடி பற்றி தொழில்நுட்ப வல்லுநர் ராஜா ஜோஸ்லின் விரிவாக எடுத்துரைத்தார். மேலும் பயிர் பாதுகாப்பு பற்றி தொழில்நுட்ப வல்லுநர் அசோக்குமார் இயற்கை வேளாண்மை பற்றி தொழில்நுட்ப வல்லுநர் திருமலைவாசன், மதிப்புக்கூட்டுதல் பற்றி தொழில்நுட்ப வல்லுநர் சோபனா ஆகியோர் விளக்கவுரை அளித்தனர்.மேலும் மையத்தின் திட்ட உதவியாளர் அறிவுச்செல்வி மண் பரிசோதனை, உயிரி உரங்கள் பயன்படுத்துவது குறித்து செயல்விளக்கம் அளித்தார். பண்ணை மேலாளர் பிரபு மாணவர்கள் அனைவரையும் அழைத்து சென்று வேளாண் அறிவியல் பண்ணையை காண்பித்து செயல் விளக்கம் அளித்தார்.


Tags : Agricultural Science Center ,
× RELATED தா.பழூர் சோழமாதேவி கிராமத்தில் கிரீடு...