×

பைக் மீது லாரி மோதி தேமுதிக பிரமுகர் பலி

அரியலூர், நவ. 20: அரியலூர் மாவட்டம் உடையார்பாளையம் அருகே அணிக்குறிச்சியை சேர்ந்தவர் கவியரசன் (40). தேமுதிக மாவட்ட பொருளாளரான இவர் அல்ராடெக் சிமென்ட் ஆலையில் ஒப்பந்தம் அடிப்படையில் சிற்றுண்டி கடை நடத்தி வந்தார். இந்நிலையில் கவியரசன் நேற்று முன்தினம் இரவு அரியலூர் கட்சி அலுவலகத்தில் உள்ளாட்சி தேர்தல் குறித்த கட்சி பணிகளை முடித்து விட்டு வீடு திரும்பினார். வி.கைகாட்டி அருகே தேளூர் கயர்லாபாத் போலீஸ் நிலையம் முன்புள்ள திருச்சி- சிதம்பரம் தேசிய நெடுஞ்சாலையில் கவியரசன் ஓட்டி பைக் மீது டிப்பர் லாரி மோதியது.இதில் படுகாயமடைந்த கவியரசனை 108 ஆம்புலன்ஸ் மூலம் மீட்டு சிகிச்சைக்காக அரியலூர் அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதில் செல்லும் வழியிலேயே கவியரசன் இறந்தார். இதுகுறித்து கயர்லாபாத் போலீஸ் சப்இன்ஸ்பெக்டர் மதியழகன் வழக்குப்பதிந்து டிப்பர் லாரி டிரைவரான தத்தனூர் மேலூர் மேலகொட்டாய் தெருவை சேர்ந்த கொளஞ்சியப்பா (35) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.Tags : truck driver ,
× RELATED லாரி மோதியதில் ஒருவர் பலி