×

கார் மோதி விபத்து; 3 பேர் படுகாயம்

அவிநாசி, நவ. 20: அவிநாசி-சேவூர் ரோடு முத்தம்மாள்நகரை சேர்ந்த மகேஷ்குமார்(34). இவர் தனது மனைவி நந்தினி(24), மகன் ஹரிபிரசாத் (7), மகள் கோதை(2) ஆகியோருடன் முத்தம்மாள் நகரிலிருந்து சூளை பஸ் நிலையத்திற்கு நேற்று நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது, அவ்வழியாக வந்த கார் நந்தினி, ஹரிபிரசாத், கோதை ஆகியோர் மீது எதிர்பாராதவிதமாக மோதி ேராட்டோரம் இருந்த மின் கம்பத்தில் முட்டி நின்றது. இந்த விபத்தில் நந்தினி, ஹரிபிரசாத், கோதை ஆகியோர் படுகாயமடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கோவையில் உள்ள தனியார் மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இது குறித்து மகேஷ்குமார் அளித்த புகாரின் பேரில் அவிநாசி போலீசார் காரை ஓட்டி வந்த சூலூரை சேர்ந்த கருப்பசாமி(65) என்பவரிடம் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.Tags : Car accident ,
× RELATED சாலையை கடக்க முயன்ற மூதாட்டி கார் மோதி பரிதாப பலி