×

மலைக்கிராம மாணவர்களுக்கு விளையாட்டு போட்டி

ஈரோடு, நவ. 20:  ஈரோடு மாவட்டத்தில் உள்ள மலைக்கிராம மாணவ-மாணவிகளுக்கு விளையாட்டு போட்டி நடத்தி உற்சாகப்படுத்தப்போவதாக எஸ்.பி. தெரிவித்துள்ளார். இது குறித்து ஈரோடு எஸ்.பி. சக்திகணேசன் கூறியதாவது: ஈரோடு மாவட்டத்தில் மலைக்கிராமங்களான தாளவாடி, ஆசனூர், பர்கூர், கடம்பூர் மற்றும் கிராமப்புறங்களான பங்களாபுதூர், டி.என்.பாளையம், பவானிசாகர் ஆகிய பகுதிகளில் பள்ளி, கல்லூரி படிக்கும் மாணவ-மாணவிகளை உற்சாகப்படுத்தவும், ஊக்குவிக்கும் வகையில் விளையாட்டு போட்டிகள் நடத்த திட்டமிட்டுள்ளேன். அதன்படி வரும் 19ம் தேதி முதல் ஒவ்வொரு கிராமமாக சென்று போட்டிகள் நடத்தி பரிசுகள் வழங்க உள்ளேன்.

அதைத்தொடர்ந்து, மலைக்கிராம மாணவ-மாணவிகளுக்கு யுபிஎஸ்சி, டிஎன்பிஎஸ்சி, யூனிபார்ம் சர்வீஸ் போன்ற போட்டிதேர்வுகள் குறித்தும் அந்த தேர்வை எப்படி அணுகுவது, வெற்றி பெறுவது போன்ற ஆலோசனைகள் வழங்க உள்ளேன். அதில், ஆர்வமுள்ள மாணவ-மாணவிகளை ஈரோடு அழைத்து வந்து கலெக்டர் அனுமதியின் பேரில் போதிய வசதிகள் செய்து தர நடவடிக்கை எடுக்கப்படும். ஈரோடு எஸ்பி அலுவலக வளாகத்தில் பொது நூலகமும் அமைக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது, என்றார்.


Tags : Sports Competition for Mountain Students ,
× RELATED ஊதிய உயர்வு வழங்க கோரி 7ம் தேதி கலெக்டர் அலுவலகம் முற்றுகை